#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி குடும்பம் நடந்த வராததால், கணவர் தூக்கிட்டு தற்கொலை.. புதுக்கோட்டையில் சோகம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, வடகாடு பாப்பன்மனை கிராமத்தை சேர்ந்தவர் இளமுருகன் (வயது 36). வடகாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி ராதா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே கணவன் - மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ராதா கோபித்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இளமுருகன் மாமனார் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி மனைவியை வீட்டிற்கு வர அழைத்துள்ளார்.
அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, வாழ்க்கையில் விரக்தியடைந்த இளமுருகன் தனது வீட்டிற்கு சென்று பூச்சிமருந்து உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த வடகாடு காவல் துறையினர், இளமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.