#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
60 வயது மருத்துவமனை ஊழியர் பலாத்கார முயற்சி, கொலை.. புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி சம்பவம்.!
அரசு மருத்துவமனை தற்காலிக உதவியாளரை பலாத்காரம் செய்யும் முயற்சி தோல்வியுற்றதால், அவரை கொலை செய்த பயங்கரம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த பெண்மணி நாகரத்தினம் (வயது 65). இவர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மருத்துவமனை வளாகத்திலேயே ஓய்வறையில் தங்கி பணிக்கு சென்றுவந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி காலை மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வருகையில், நாகரத்தினம் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் சுற்றியது உறுதியானது.
இவர்களில் ஒரு நபரை புதுக்கோட்டை மீன் மார்க்கெட் அருகே காவல் துறையினர் கைது செய்த நிலையில், அவர் சிவா என்ற ஜீவானந்தம் (வயது 46) என்பது உறுதியானது. இவருடன் வீரராசு என்பவர் சேர்ந்து நாகரத்தினத்தை கொலை செய்தது அம்பலமானது. ஜீவானந்தத்தின் தகவலின் பேரில் வீரராசுவும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில், சம்பவத்தன்று இருவரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஓய்வறையில் தங்கியிருந்த நாகரத்தினத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். நாகரத்தினம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய காரணத்தால், அவரை அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.