#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பந்தோபஸ்துக்கு சென்ற இடத்தில் ரேம்ப் வாக்.. 5 காவலர்களுக்கு ஆப்படித்த உயரதிகாரி..!
பேஷன் ஷோவுக்கு சென்று ரேம்ப் வாக் நடந்த காவல் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த பேஷன் ஷோவுக்கு செம்பனார்கோவில் காவல் துறையினர் சார்பில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் அதிகாரிகளை அழைத்து பாராட்டிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், அவர்களை ரேம்ப் வாக் செல்ல வற்புறுத்தி இருக்கிறார். ஒருகட்டத்தில் வற்புறுத்தல் அதிகமானதால், காவலர்கள் வேறு வழியின்றி ரேம்ப் வாக் வந்தனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் ரேணுகா, அஸ்வினி, நித்யஷீலா, ஸ்ரீனிவாசன் ஆகிய 5 காவல் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.