பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நிவர் புயலைத் தொடர்ந்து உருவாகும் ‘புரெவி‘ புயல்.! அந்த புயல் எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா.?
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் இரண்டு நாட்களில் தொடர்ந்து 36 மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளதுடன், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' எனப் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகி புயலாக மாற உள்ளதால், தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அதன்பின் புயலக உருவெடுத்து டிசம்பர் 2-ந்தேதி மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.