வேற லெவல் இளைஞர்கள்.! இதெல்லாம் மனசுல வச்சுட்டு தேர்தல்ல நின்னுங்க..! தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்த இளைஞர்கள்.!



puthupatti youngsters postes for election

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். 

இந்தநிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், புதுப்பட்டி ஊராட்சியில் 'ஊராட்சி பதவிகளுக்கு' போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். 

thenkasi

அதில், ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை, ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று யாரும் நினைத்து வரவேண்டாம். கிராமசபை கூட்டங்களில் புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்படும். கேட்டு அறியப்பட்ட அனைத்து தகவல்களும் சரியானதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சரிபார்க்கப்படும்.

அப்போது ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர், பதவி, புகைப்படம் போன்றவை சமூக வலைத்தளங்களில் புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்களால் பகிரப்படும். இப்படிக்கு ஊராட்சி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என குறிப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் இளைஞர்கள் இது போல் செயல்பட்டால் லஞ்சம் மற்றும் ஊழலை தவிர்க்க முடியும் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.