மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதலை 2ம் பாகத்தின் பாடல் நாளை வெளியீடு; காந்த குரலில் இழுக்கும் இளையராஜா.. ப்ரோமோ உள்ளே.!
வெற்றிமாறன் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வெளியான படம் விடுதலை படம், இரண்டு பாகமாக பிரித்து வெளியிடப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது.
படத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன், இளவரசு உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் இசையமைப்பு பணிகளை இளையராஜாவும், ஒளிப்பதிவு பணிகளை வேல்ராஜும் மேற்கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: நயன்தாரா Vs தனுஷ் விவகாரம்.. தனுஷுக்கு பெருகும் ஆதரவு., பரபரப்பு காரணம்.!
பாராட்டுகளை பெற்ற படம்
படம் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, சுமார் 5 நிமிடங்கள் அவையோரின் கரம் எழுப்பிய ஒலிகளை பாராட்டு மழைகளாக பெற்றது.
தினம் தினம் உன் நினைப்பு பாடல்
இந்நிலையில், விடுதலை 2ம் பாகத்தின் தினம் தினம் உன் நினைப்பு என்ற பாடல் காட்சிகள் நாளை காலை 10 மணியளவில் வெளியாகிறது. இதன் ப்ரோமோ வீடியோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளையராஜா மீண்டும் தனது காந்தக்குரலில் பாட, உடல் புல்லரிப்புகளை பெறுகிறது.
#DhinamDhinamum - First single promo from director #VetriMaaran 's #ViduthalaiPart2 is here! Full track will be out tomorrow at 10 AM. #ViduthalaiPart2FromDec20@VijaySethuOffl @sooriofficial @Ananyabhat14 @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre… pic.twitter.com/4F9wxgLEuo
— Ilaiyaraaja (@ilaiyaraaja) November 16, 2024
இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரம்; சுந்தரி சீரியல் நடிகை மீனா கைது.!