மான் கூட்டத்தை துரத்தி ஓடி வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறை.!



Youth Gang Atrocity on Masinagudi Forest Area Forest Dept Fined Rs 15000 INR 

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேசிய விலங்குகள் பூங்காவும் இங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் மசினகுடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஆர்வமிகுதி

இதனிடையே, முதுமலை தெப்பக்காடு, புலிகள் காப்பகம் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் காரில் சுற்றுலா வந்த நபர்கள், அங்கு சாலையோரம் இருந்த மான்களை கண்டனர். இதில், ஆர்வமிகுதி இளைஞர் ஒருவர், மான்களை துரத்திச் சென்றார்.

இதையும் படிங்க: இராஜபாளையம்: சீருடையில் இருந்த காவலர்கள் மீது லத்தியால் சரமாரி தாக்குதல்.. போதையில் கும்பல் வெறிச்செயல்..! 

வனத்துறை அபராதம் விதிப்பு

இந்த விஷயம் தொடர்பான காணொளி பின்னால் வருகை தந்த நபர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய வனத்துறையினர், ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த நபர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நவீன துப்பாக்கி, ஸ்கோப்புடன் வலம்வந்த நபர்; அதிர்ந்துபோன திருப்பூர் மக்கள்.. உண்மை இதோ.!