#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அப்போ சமந்தா., இப்போ ஸ்ரீலீலா.. ஐட்டம் டான்ஸ்-க்கு குத்தாட்டம் போட ரெடியா?.. புஷ்பா 2 அசத்தல் அப்டேட்.!
சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று இருந்த பல பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஊ சொல்றியா மாமா, என் சாமி, ஸ்ரீவள்ளி ஆகிய பாடல்கள் பலரையும் ரசிக்க வைத்தன.
செம்மரக்கடத்தல் அரசியல் படம்
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக் கடத்தல், அதன் பின்னணியில் உள்ள அரசியல், கேங்ஸ்டரிசம் போன்ற கதையம்சத்துடன் வெளியாகி இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமும் படம்பிடிக்கப்பட்டு வந்தது. கடந்த சுதந்திர தினம் அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் தாமதம் காரணமாக படம் 5 டிசம்பர் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Pushpa 2: புஷ்பா 2 படத்தின் வெளியீடு தேதி மாற்றம்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஸ்ரீ லீலாவின் பாடல்
இந்நிலையில், நடிகை ஸ்ரீ லீலா புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றுள்ள கிஸ்ஸிக் என்ற கவர்ச்சிப் பாடலுக்கு நடனமாடுவது படக்குழு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புஷ்பா 1 படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது ஸ்ரீ லீலா கவர்ச்சிப்பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
பாலிவுட் திரையுலகில் கமர்ஷியல் என்டர்டைன்மெண்ட் படங்களில் கட்டாயம் இடம்பெறும் கவர்ச்சிப் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அதுபோன்ற நிலை தெலுங்கு சினிமாவிலும் உருவாகியுள்ளது. புஷ்பா 2 படம் தெலுங்கு மொழி மட்டுமல்லாது கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் உலகளவில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Team #Pushpa2TheRule welcomes The Dancing Queen @sreeleela14 on board for the #Kissik Song of the Year❤🔥
— Pushpa (@PushpaMovie) November 10, 2024
This song is going to be a dance feast and a musical delight 💥💥💥
GRAND RELEASE WORLDWIDE ON 5th DECEMBER, 2024.#Pushpa2TheRuleOnDec5th
Icon Star @alluarjun… pic.twitter.com/liaIZQCL3s
புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் டிசம்பர் 05, 2024 அன்று வெளியாகிறது.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்தில் இணைந்த அனிமல் பட வில்லன்?; எகிறும் எதிர்பார்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!