#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செமஸ்ட்டர் தேர்வில் சாதியை குறித்து கேள்வி: சர்ச்சையில் சிக்கிய பல்கலைகழகம்..!
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதுகலை வரலாறு 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
முதுகலை வரலாறு 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். மேலும் செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்கள் பிற பல்கலைகழகங்கள் மர்றும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார்.
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க போராடிய பெரியார் பெயரால் இயங்கும் பல்கலைகழகத்தில் சாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.