ஒருமணி நேரத்தில் 47 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்.! அச்சத்தில் பொதுமக்கள்.!



rabid dog bites 47 people


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியிடம் புகார் கொடுத்ததும் எவ்வித நவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், சோளிங்கர் பேருந்து நிலையம் பகுதியில் வெறிநாய் ஒன்று திடீரென சாலையில் நடந்துச்சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். 

ஆனால் அந்த நாய் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சென்று நடந்து சென்ற பொதுமக்களை கடித்து குதறியது. ஒரு மணி நேரத்தில் மொத்தம் 47 நபர்களை அந்த நாய் கடித்துள்ளது. அதில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலையில் நடந்துச்சென்றவர்களை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அறிந்த ராணிப்பேட்டை மக்கள் கடும் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், அப்பகுதிகளில்  தேவையில்லாமல் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.