#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. சண்டை இருக்கத்தான் செய்யும். இனி அ.தி.மு.க மட்டுமே ஆளவேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், வசதி வாய்ப்பு இல்லாத வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது எனவும், இது கம்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களைத் தேர்வு செய்து சீட்டு கொடுங்கள் என கூறினார் தி.மு.க கட்சி அழிந்து வருவதாகவும், அதில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்க கூட ஆள் இல்லை எனவும் விமர்சித்தார்.
மேலும், தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை, அவரது மகன் ஸ்டாலினா அதிமுகவை அழிக்க போகிறார்? அது முடியவே முடியாத காரியம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.