கொரோனா பரவலை குறைக்க மருத்துவர் ராமதாஸ் கொடுத்த பக்கா ஐடியா.!



ramadoss talk about lockdown

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை அதிவேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொரோனா தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை மற்றவர்களுக்கும் பரப்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "முழு ஊரடங்கு என்றால் வீட்டை விட்டு வெளியில் வராதே என்பது தான் அர்த்தம்.  மகிழுந்து, இரு சக்கர ஊர்திகளின் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள். ஊரடங்கின் பொருளை இன்னும் புரிந்து கொள்ளாமல்  ஊர் சுற்றி வருவோருக்கான அறிவுரை இது! வெளியே சுற்றாமல் வீட்டில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் உங்களையும், குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை பரப்பாததன் மூலம்  மற்றவர்களைக் காப்பாற்றுங்கள்!" என தெரிவித்துள்ளார்.