மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரக்கோணத்தில் வடமாநில கும்பல் பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்.. சென்னையை சார்ந்த 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை.!
நாட்டு துப்பாக்கியால் குடும்பத்தினரை சுட்டு நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, சென்னையை சார்ந்த 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தை சார்ந்தவர் புஷ்பகரன். சம்பவத்தன்று, நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் புஷ்பகரனின் வீட்டுக்கதவை தட்டிய நிலையில், உறவினராக இருக்கும் என எண்ணி அவரும் கதவை திறந்துள்ளார். கைகளில் பயங்கர ஆயுதத்துடன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், புஷ்பகரன் உட்பட குடும்பத்தினர் 4 பேரை வெட்டியது.
மேலும், நாட்டுத்துப்பாக்கியால் நால்வரையும் சுட்டு, வீட்டில் இருந்த 25 சவரன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் படுகாயமடைந்து இருந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினரிடம் கூறினால் தேடி வந்து கொலை செய்வோம் என்றும் கொள்ளைக்கும்பல் மிரட்டி சென்ற நிலையில், தீரன் திரைப்பட பாணியில் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டு வந்த நிலையில், சென்னை வியாசர்பாடியை 2 இளைஞர்கள் உட்பட 6 பேரிடம் தற்போது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.