பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கோவிலுக்குள் பயங்கரம்..! கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி.. ஒருதலைக்காதலன் வெறிச்செயல்..!
கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற கல்லூரி மாணவி, ஒருதலைக்காதலன் என்ற கொடூரனால் கொலை செய்ய முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண்மணி, காவேரிப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். வெள்ளிக்கிழமையன்று மாணவி வீட்டருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த நிதிஷ் குமார் (வயது 23) என்ற இளைஞர், 21 வயது கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார். நிதிஷின் காதலை ஏற்றுக்கொள்ளாத மாணவி, இதற்கு மேல் பின்தொடர்ந்தால் பெற்றோரிடம் கூறிவிடுவதாக எச்சரித்து இருக்கிறார்.
அவள் காதலை ஏற்க வேண்டும், இல்லையேல் மரணிக்க வேண்டும் என்ற வன்ம எண்ணத்துடன் சென்ற நிதிஷ் குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்து தப்பி சென்றுள்ளான். இரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மாணவியை மீட்டு அரசு வாலாஜாபேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவேரிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியின் வாக்குமூலத்தின் பேரில் நிதிஷ் குமாரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.