#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கருணாநிதிக்கு கலைஞர் என்ற பெயர்(பட்டம்) எப்படி வந்தது தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ!
ஆகஸ்ட் 7. நாளை, மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்க பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம், சிலை திறப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கருணாநிதி என்று சொல்வதைவிட கலைஞர் கருணாநிதி என்று சொன்னால்தான் நம்மில் பலருக்கும் தெரியும். ஒருசிலர் அவரது பெயரே கலைஞர் கருணாநிதி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
கலைஞரின் உண்மையான பெயர் முத்துவேல் கருணாநிதி என்பதாகும். முத்துவேல் எனப்து அவரது தந்தை பெயர். அரசியல், நாடகம், சினிமா என பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற கருணாநிதி தூக்கு மேடை என்ற ஒரு நாடகத்தில் பணியாற்றினார்.
அந்த சமயம் பிரபல நடிகர் MR ராதா கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். அன்றில் இருந்து இன்றுவரை அனைவராலும் கலைஞர் கருணாநிதி என்றே அழைக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.