#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரெட் அலர்ட்: நாளை இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது குமரி முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.