டிராக்டர் மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து... மூன்று மாத பச்சிளம் குழந்தை உட்பட ஐந்து பேர் பலி!!



Road accident 5 members died in Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் அருகே டிராக்டர் மீது பின்னால் வந்த சொகுசு பேருந்து மோதியதில் 3 மாத பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தருமபுரி மாவட்டம் சவுளூர் கிராமத்தை சேர்ந்த 12 பேர் அருகே உள்ள கிராமத்தில் கற்றாழை அறுவடை செய்ய டிராக்டரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது டிராக்டர் ஏர்ர அள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அதில் டிராக்டருக்கு பின்னால் சிவகாசியிலிருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியுள்ளது.

Krishnagiri

அதில் டிராக்டரில் பயணம் செய்த நபர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் முத்து (20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45), 3 மாத குழந்தை வர்ஷினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 7 நபர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.