பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மகளிர் உரிமைத்தொகை குட் நியூஸ்; பொங்கலுக்கு முன்பே ரூ.1000 வழங்க வாய்ப்பு.!
2024 புத்தாண்டு தொடங்கிய 15 நாட்களுக்குள், தமிழர்கள் வெகு விமர்சையாக சிறப்பிக்கும் பொங்கல் பண்டிகை வந்துவிடும். இதனால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், போனதால் பண்டிகையை கொண்டாட காத்திருக்கின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு அரசு வீட்டுத்தலைவிகளுக்கு மாதம் உரிமைத்தொகையாக, தகுதிபெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது. மாதத்தின் 15 முதல் 17ம் தேதியில் இத்தொகை கிடைக்கப்பெறும்.
இந்நிலையில், நடப்பு மாதத்தில் ஜனவரி 14ல் இருந்து அரசு விடுமுறை, பொங்கல் பண்டிகை பொருட்கள் வழங்குதல் என அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்படும்.
இதனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்காக மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 13ம் தேதியே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு கொள்முதல் செய்யவும் ஆட்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பனும் உறுதி செய்துள்ளார்.