#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஷியா - உக்ரைன் போர்.. சென்னையில் உள்ள ரஷிய துணை தூதரத்திற்கு பாதுகாப்பு.!
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைனை மீண்டும் தன்வசப்படுத்தி ரஷியா இறுதிக்கட்ட படையெடுப்பு முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதனால் நேற்று அதிகாலை முதல் உக்ரைனில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குண்டு வீச்சுக்கு இறையாகியுள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இராணுவத்திற்கு பிறப்பித்த படையெடுப்பு உத்தரவின் கீழ், போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை பல்முனை தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இராணுவ வீரர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நாங்கள் உலக நாடுகளால் தனித்து விட்டுள்ளோம், எங்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் என்று உலக நாடுகளிடம் உதவி கேட்கும் நிலையில், அவை எதுவும் தற்போது வரை கிடைப்பதில் சிக்கல் தொடர்வதால் அந்நாட்டு மக்களை போரில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து, நாட்டை காக்க யார் வந்தாலும் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் போர்ப்பதற்றம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மேலும், இந்திய பங்குச்சந்தைகள் அனைத்தும் சரிவில் தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரஷிய துணை தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி, ஐ.நா சபையின் கண்டனத்தையும் கண்டுகொள்ளாது ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதால் அதன் தாக்கம் பல்வேறு நாடுகளில் உள்ள ரஷிய தூதரகத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாளர்களால் எதிரொலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு, அதன் துணை தூதரகத்திற்கும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் இருக்கும் ரஷிய துணை தூதரகம் மற்றும் ரஷிய கலாச்சார மையத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.