#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்!! கொரோனா நிவாரண நிதியை அள்ளிக்கொடுத்த சக்தி மசாலா நிறுவனம்!! எத்தனை கோடி தெரியுமா??
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும், நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தும்வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும் தமிழக அரசின் முயற்சிக்கு உதவியாக பலரும் கொரோனா தடிப்பு பணிகளுக்காக பல்வேறு நிதி உதவியை செய்துவருகின்றனர். நடிகர்கள் ரஜினி, அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் என பலரும் பல லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
அதேபோல் சன் தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் 10 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியது. தற்போது சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.