#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வறுமையை பயன்படுத்தி ஹோட்டலில் வேலை கேட்டு, வரம்கொடுத்த முதலாளியை கட்டையால் அடித்து கொன்ற பயங்கரம்.. சேலத்தில் பேரதிர்ச்சி.!
சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 60). இவர் அரியனூர் பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருவதால், வியாபாரம் முடிந்து உடலிலேயே இரவில் உறங்குவர்.
நேற்று வழக்கம்போல வேலை முடிந்ததும் ஓட்டலிலேயே அவர் உறங்கிவிட்ட நிலையில், மறுநாள் காலையில் பொதுமக்கள் வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் அவர் மிதப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக அரியானூர் பேருந்து நிறுத்தத்தில் மேட்டுபாளையத்தை சேர்ந்த ஜோசப் நின்றுள்ளார்.
அவருக்கு கந்தசாமி லிப்ட் கொடுத்த சமயத்தில், ஜோசப் தனது நிலை என கதை ஒன்றை கூறி கந்தசாமியின் மனதை கரைய வைத்துள்ளார். இதனையடுத்து, எனது ஓட்டலிலேயே நீ வேலை பாரேன் என்று வேலை கொடுத்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஜோசப் கடையில் திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார்.
அதனை கையும் களவுமாக பிடித்த கந்தசாமியை ஜோசப் அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றது அம்பலமானது. தலைமறைவான ஜோசப்பை தேடி அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.