நண்பனான சாரைப்பாம்பு இறந்ததால் நல்லபாம்பு செய்த நெகிழ்ச்சி செயல்.. வியந்துபோன தீயணைப்பு படை வீரர்கள்.!
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்புக்கு உள்ள நட்பு பிரிவின் வலியால் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் விவசாயி ஆவார். தனது விவசாய தோட்டத்தில் பூக்களை பெருவாரியாக சாகுபடி செய்து வருகிறார்.
பூ செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச பண்ணைகுட்டையும் உள்ளது. இந்த குட்டையில் தேங்கும் நீர் நிலத்தடிக்கு செல்லாமல் இருக்க, அதனை சுற்றிலும் தார்பாய் அமைத்துள்ளார். தற்போது அக்குட்டையில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது, குழாயில் இருந்த 2 பாம்புகளும் பண்ணை குட்டையில் விழுந்துள்ளது. இவை ஒன்றோடன்று பின்னி விளையாடிய சமயத்தில் சாரைப்பாம்பு நீருக்குள் மூழ்கி உயிரிழந்தது.
அதனுடன் விளையாடிய நல்ல பாம்பு நண்பனின் பிரிவை எண்ணி ஏற்றுக்கொள்ள இயலாமல் அங்கேயே இருந்துள்ளது. இந்த விஷயம் குறித்தது பிரபாகரன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வந்து பாம்பை பிடிக்க முயற்சித்தபோது அது தப்பி செல்லாமல் சாரைப்பாம்பின் உடல் அருகே சுற்றிச்சுற்றி வளம் வந்துள்ளது. இதனால் ஒருமணிநேர போராட்டத்திற்கு பின் நல்லபாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. தனது நண்பனின் இறப்பால் நல்ல பாம்பு தவித்தது அங்கிருந்த தீயணைப்பு வீரர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.