#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வயிற்று வலியால் துடித்த பெண் : ஸ்கேன் செய்கையில் 6 கிலோ எடையுள்ள வயிற்று கட்டி..!
3 மணிநேரம் போராடி பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடையுள்ள கட்டியானது அகற்றப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம், உமையாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் இராஜேந்திரன். இவரின் மனைவி குள்ளம்பட்டு (வயது 55). கடந்த 2 ஆண்டுகளாகவே குள்ளம்பட்டு வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார். பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்தும் பலனில்லை.
இந்த நிலையில், ஸ்கேன் மையத்தில் நடந்த பரிசோதனையில் குள்ளப்பட்டின் வயிற்றுக்குள் அபாயகரமான கட்டி யிருப்பது உறுதியானது. இதனை அகற்ற வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு, மருத்துவர் இந்துமதி ஆனந்த் தலைமையிலான மருத்துவர்கள் 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர்.
3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் குள்ளம்பட்டின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடையுள்ள கட்டியானது அகற்றப்பட்டது. இவர் இன்னும் சில நாட்களில் பூரண நலத்துடன் வீட்டிற்கு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வயிற்று வலியால் துடித்த பெண்ணின் வயிற்று கட்டியை நீக்கிய மருத்துவர்களுக்கு குள்ளம்பட்டின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.