பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இன்று தேர்வு தொடங்க உள்ள நிலையில்12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!
பள்ளி பொதுத்தேர்வுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை பெற்றோர் செலுத்தாததால் மனமுடைந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த புழல் லிங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தையல் தொழிலாளியான இவருடைய மகள் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பொதுத் தேர்வு துவங்கும் நிலையில் அதற்கான கட்டணத்தை அவரது பெற்றோர் நேற்று முன்தினம் வரை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையே என்ற விரக்தியில் இருந்து வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.