கொரோனா நிவாரண நிதி.! பணத்தை அள்ளிக்கொடுத்த நம்ம சிவகார்த்திகேயன்.! தொகை எவ்வளவு தெரியுமா.?



shivakarthikeyan given corona relief fund

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 31 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

தமிழகத்தில் தற்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கு கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படும் நிலையில், நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். மேலும், இதற்காகச் செலுத்தப்படும் நிதி அனைத்தும் கரோனா நிவாரணத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், அதன் கணக்குவழக்குகள் வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

corona

இந்தநிலையில், நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி அளித்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், தல அஜித், ரஜினியின் மகள் சவுந்தர்யா உள்ளிட்ட  திரைத்துறையினர் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருக்கிறார்.