குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அச்சச்சோ.. என்ன சொல்றீங்க?..! பிரபல தமிழ் பின்னணி பாடகரின் செல்போன் திருட்டு.. சந்தையில் நடந்த சம்பவம்..!
பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்ற புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள பல்லாவரம், பழைய ட்ரங்க் சாலையில் வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். இந்த சந்தையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் மலிவான விலைகளில் கிடைக்கும்.
இதனால் வெள்ளிக்கிழமையில் பல்லாவரம் ட்ரங்க் சாலையில் மக்கள் வெள்ளம் ஆட்பறித்து காணப்படும். இந்நிலையில், நேற்று கிராமிய பாடகர், திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி (வயது 60) பல்லாவரம் சந்தைக்கு காலையில் சென்றிருந்தார்.
தனது காரிலேயே குப்புசாமி பயணம் செய்த நிலையில், சந்தையில் நடந்து சென்று பூ செடிகளை வாங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அவரின் சட்டைப்பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட்டது உறுதியானது.
இந்த விஷயம் தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்று ஒரேநாளில் மொத்தமாக 7 பேரின் செல்போன் மக்களிடம் திருடப்பட்டுள்ளது.