திருமணம் வேண்டும் என கட்டாயப்படுத்திய மகன்!. தந்தை கண்டுகொள்ளாததால் மகன் செய்த கொடூரச்செயல்!.



son-forced-to-marriage


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திருமணம் செய்து வைக்காத தந்தையை வெட்டிக்கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முருகப்பா. முருகப்பாவிற்கு திருமண வயது வந்தும் அவரது தந்தை கணேசன் திருமண ஏற்பாடுகள் செய்யவில்லை. 

இதனால் தனக்கு விரைவில் திருமணம் செய்யவேண்டும் என்று அவரது தந்தையை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரது தந்தைக்கும் - மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Murder

வழக்கம்போல் திருமணம் தொடர்பாக அவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் கணேசனை கோடாரியால் அவரது மகன் முருகப்பா வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவம் அறிந்துவந்த போலீசார் கணேசனின் மகன் முருகப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.