#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலைகீழாக இறங்கி சுஜித்தை காப்பாற்ற தயாராக இருந்த சிறுவன்! ஆனால் இப்படி ஆயிற்றே
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை சுஜித். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
இந்நிலையில் கடந்த 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 4.30 மணியளவில் உடலை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க மாதேஷ் என்ற சிறுவன் சம்பவம் குறித்து மிகவும் ஆதங்கமாக செய்தியாளரிடம் பேசியுள்ளார். அதாவது நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் நிறைய அனுபவம் இருக்கிறது என்று கூறியுள்ளான்.
நான் சுஜித்தின் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது. மேலும் எனது தந்தை இந்த தொழிலை தான் செய்து வருகின்றார். அவர் கிணறு தோண்டும்பொழுது உள்ளே பொருட்கள் ஏதும் விழுந்துவிட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.
மேலும் விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த முறையை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். வெறுமனே ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருளாக இருந்தால் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று விழுந்த பொருளை எடுத்து விடுவேன். அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம்.
ஆனால் அங்கு உள்ளவர்கள் அதை செய்ய மறுத்து விட்டனர் என மிகவும் ஆதங்கமாக பேசினார் அந்த சிறுவன். மேலும் சுஜித் உள்ளே விழுந்ததும் தூக்கியிருந்தால் அவன் உயிர் தப்பி இருக்கும் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.