#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொட்டதெல்லாம் துலங்குதே.. தல அஜித்துக்கு இப்படி ஒரு ராசியா.!
தல அஜித் என்றால் மாஸ் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் தனி மரியாதை என்று தான் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி சினிமாவை தவிர சிறந்த புகைப்பட நிபுணர் கார் மற்றும் பைக் ரேஸில் பிரியர் என்று சிலருக்கு தெரிந்திருக்கும்.
சமீபத்தில் இவைகளிலிருந்து சற்று மாறுபட்டு ட்ரோன் (குட்டி விமானம்) தயாரித்து செயல்படுத்துவதில் இவரது ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனால் சென்னை ஐஐடி தக்ஷா குழு மாணவர்களின் ட்ரோன் (குட்டி விமானம்) தயாரிக்கும் குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதோடு விட்டுவிடாமல் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மேலும் சிறந்த ஆலோசனைகளை வழங்க ஜெர்மனிக்குச் சென்று ஏரோ மாடலிங் (Aero Modelling) தொடர்பான ஆராய்ச்சியாளர்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட ட்ரோன் பறக்கவிடும் போட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அஜித்தை ஆலோசகராகக் கொண்ட சென்னை ஐஐடி தக்ஷா மாணவர்கள் குழுவும் கலந்து கொண்டது.
அதில் வெற்றி பெற்ற தக்ஷா குழுவுக்குத் தமிழக அரசு விருது அளித்து கௌரவித்தது. பின், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள டால்பியில் கடந்த 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ட்ரோன் போட்டி நடத்தப்பட்டது.
அந்தப் போட்டியிலும் கலந்துகொண் தக்ஷா குழுவின் விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் பறந்து உலக சாதனை படைத்தது. சர்வதேச வான்வெளி போட்டி குழு தக்ஷா ட்ரோனுக்கு உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.