மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிக்கு சென்ற மகனை பிணமாக பார்த்த பெற்றோர்.. லாரியால் வந்த வினை.. கொந்தளிக்கும் உறவினர்கள்.!!
லாரி மோதி 16 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம் முடிச்சூர் பகுதியைச் சார்ந்தவர் நாராயணமூர்த்தி. இவரின் மனைவி பொன்னி. இவர்களுக்கு லட்சுமிபதி என்ற 16 வயது மகன் இருக்கிறார். இவர் பழைய தாம்பரம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். வீட்டிலிருந்து தினமும் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள லட்சுமிபதி நேற்று காலை முடிச்சூர் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி லட்சுமிபதி மீது மோதவே, நிலை தடுமாறி விழுந்த லட்சுமிபதி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள், "கடந்த வாரத்தில் இதே பகுதியில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அதற்குள் மற்றொரு விபத்து நடந்துள்ளது என்றும், மாணவர்கள் பள்ளி கல்லூரி செல்லும் வேளையில் லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
பின் காவல்துறையினர் இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை டுப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தி, உறவினர்களை கலைந்து செல்ல வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.