தமிழகத்துக்கு நல்ல செய்தி! மெல்ல குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?



Tamil Nadu and Chennai latest corona positive case update

தமிழகத்தில் இன்று ஒரே மட்டும் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இன்று ஒரு நாளில் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரு நாளில் 1,164 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா மரணம் 10,371 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதல் தரும் விதமாக, 5,117 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குமணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்க்ளின் எண்ணிக்கை 6,12,320 ஆக உள்ளது.