#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பா!! மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று மட்டும் 6618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 6618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 2124 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,65,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். 14 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2314 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,78,571 பேர்.