பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவின் வில்லன் தமிழ்ராக்கர்ஸ், பிரபாகரனின் பிறந்தநாளுக்கு செய்த வேலையை பார்த்தீங்களா.!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று தமிழ்ராக்கர்ஸ் அவரது புகைப்படத்தை தங்களது பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பிறந்தார்.மேலும் தமிழ் ஈழத்திற்காக பெரும் பாடுபட்ட அவர் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இவரது 64வது பிறந்தநாள் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகிற்கு சவாலாகவும்,தமிழ் நடிகர்களுக்கு வில்லனாகவும் இருக்கும் தமிழ்ராக்கர்ஸ், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது, புகைப்படத்தை தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்தது.மேலும் தமிழ் தேசிய தலைவருக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழர் எழுச்சி நாள் என்றும் பதிவிட்டிருந்தது.