#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழிசையை இந்தி இசை என்று சொல்கிறார்கள்.! இன்னொரு மொழியை கற்றதால் தான் கம்பர் ராமாயணத்தை இயற்றினார்.! தமிழிசை பேச்சு
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் பெருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் 10-ம் நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இதில் கம்பன் கழக தலைவர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழிசை சவுந்தரராஜன் அவ்விழாவில் பேசுகையில், புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் 10 நாட்கள் கம்பன் பெருவிழா நடந்தது பாராட்டுக்குறியது. கம்பனை கம்பன் கழகம் கொண்டாடுகிறது, மற்ற கழகங்கள் கொண்டாடவில்லை. ராமனை கொண்டாட மறுக்கிறது.
என்னை கேலிசெய்து மீம்ஸ் போடுகின்றனர். நண்பர்களால் உயர்வதில்லை எதிரிகளால் தான் உயர்கிறேன். இன்னொரு மொழியை கற்றதால் தான் கம்பர் ராமாயணத்தை இயற்றினார். தமிழிசையை இந்தி இசை என்று சொல்கின்றனர். தாய்மொழியை சரியாக பேச முடியாதவர்கள் பேசுகின்றனர். இந்த உலகம் இருக்கும் வரை கம்பராமாயணம் இருக்கும் என்று கூறினார்.