#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாஜி அதிமுக எம்எல்ஏ மரணம்; சோகத்தில் மூழ்கியுள்ள அதிமுகவினர்.!
அதிமுக கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் மரணம். அவருடைய மறைவையொட்டி அதிமுக கட்சியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.ராஜமாணிக்கம் (76) உடல்நலக்குறைவு காரணாக காலமானார்.
அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் ராஜமாணிக்கம். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய ஆரம்பகாலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்து கட்சி வளர பெரும் உதவியாக விளங்கியவர். எம்ஜிஆர் ஆட்சியின்போது 1984-87 காலகட்டங்களில் தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.
இவருடைய மகன் முருகன் என்பவர் கடந்த தேர்தலின் போது இதே தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுள் ஒருவர். தற்போது அதிமுக கட்சியில் இருந்து விலகிய அவர் அமமுக கட்சியில் அங்கம் வகிக்கிறார்.