பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நீங்கதா போராடுவீங்களா நாங்களும் போராடுவோம்! களத்தில் குதித்த மாணவர்கள்.!
ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து ஆங்காங்கே போராட துவங்கியுள்ளனர்.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்புக்கு ஆதரவாக பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் இன்று முதல் பணிக்கு திரும்பாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தங்களது போராட்டத்தை தொடரப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிக்கு வராத ஆசிாியா்களின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்.