பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முதல்வர் வீட்டில் வெடிகுண்டா.! உஷாரான! போலீசாரால் வாலிபர் கைது.!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று போனில் மிரட்டல் விடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று, இரவு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடி குண்டு வெடிக்கும் என்று கூறி போனை கட் செய்துள்ளார் மர்ம நபர் ஒருவர்.
இதனைத் தொடர்ந்து போன் வந்த செல்போன் நம்பரை வைத்து யார்? போன் செய்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை சென்னை கானாத்தூர் பகுதுியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது நேற்று மாலை குடிபோதையில் பைக் ஓட்டிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரது பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். அதனால் கோபமடைந்த அவர் காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போன் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.