#Breaking: +2 மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பொதுத்தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!



tamilnadu-12th-students-public-rxam-fees-canceled

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு நடக்கவிருக்கும் நிலையில், மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ் வழியில் பயிலாத மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு ரூ.225 மற்றும் செய்முறை அல்லாத பாடங்களுக்கு ரூ.170-ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

tamilnadu

ஜனவரி 20 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று பள்ளி நிர்வாகம் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.