பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழகமே சோகம்.. காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில், தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் மணி உயிரிழப்பு.!
காஷ்மீரில் நடைபெற்ற சாலை விபத்தில், தமிழ்நாட்டினை பூர்வீகமாக கொண்ட இராணுவ வீரர் மணி என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு இராணுவத்தை நிலைநிறுத்தி, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் இராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சார்ந்த துணை இராணுவப் படை வீரர் மணி என்பவர் காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் வேனில் சென்ற சமயத்தில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மணி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.