#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவதரித்த சில நாளிலேயே இப்படி ஒரு சோதனையா?.. தகர்க்குமா தாயி?..!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை மக்களை விதவிதமாக ஏமாற்றும் கூட்டம் உருவாகிக்கொண்டு தான் இருக்கும். அவ்வகையில், போலிச்சாமியார்களின் அட்டகாசம் வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண் - பெண் பேதமின்றி போலிச்சாமியாராக உருவெடுத்து மக்களை நூதன முறையில் பலரும் ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக புதிய பெண் சாமியார் திடீரென அவதரித்து, இணையவழி நெட்டிசன்களுக்கு கலாய்க்க பெரும் உதவி செய்துள்ளார். அன்னபூரணி அம்மாள் என்று அழைக்கப்படும் பெண்மணி, பட்டுசேலை அணிந்து காரில் இறங்கி பூதூவப்படும் பாதையில் நடந்து வருகிறார். அவருக்கு பின்னணியில் சொல்லிவைத்தார் போல மஞ்சள், சிவப்பு, பச்சை நிற ஆடையுடன் பக்தர்கள் வரவேற்கின்றனர்.
வலது கைகளை காண்பித்து ஆசி வழங்குபவர் போல வந்து, ஆடம்பர இருக்கையில் அமரும் பெண்ணை சாமியார் என்று பாவிக்க ஆண்களும், பெண்களும் கால்களில் விழுந்து வழிபாடு செய்கின்றனர். மேலும், கோவிலில் தெய்வங்களுக்கு தீபம் காண்பிப்பது போல பெண்ணுக்கு விதவிதமான பாடலுடன் தீவாராதனையும் நடக்கிறது. பெண்ணும் உடலுக்குள் சக்தி வந்ததை போல பாவித்து படம் காண்பிக்கிறார்.
சாமியார் தொடர்பான தகவல் வைரலானது, செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் புத்தாண்டு தினத்தில் போலி சாமியார் காலை 9 மணிமுதல் 12 மணிவரை அருள்வாக்கு கூறப்போவதாகவும், பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் விளம்பர யுக்தி கையில் எடுக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது.
இந்த பெண் சாமியார் முன்னதாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையில் சிக்கி சர்ச்சையை சந்தித்த நிலையில், தற்போது ஞான உதயம் கிடைத்தார் போல பாவனை செய்து சாமியாராக உருவெடுத்து இருக்கிறார். பலரும் இரண்டு விடீயோக்களையும் ஒன்றாக இணைத்து காரசாரமான விவாதத்துடன் வைரல் செய்து வருகின்றனர்.
இப்படியான நிலையில், காவல் துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், மண்டப உரிமையாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பிடித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மனதின் தூய்மையே இறைவனின் வடிவம். மனதுக்குள் அழுக்கு இருந்தால் எங்கு போனாலும் மோட்ஷம் கிடைக்காது. போலிச்சாமியரின் காலில் விழ பணமும், உங்களின் பொன்னான நேரமும் தான் செலவாகும்.