#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை.. 2 நாள் ஊதியம் அதிரடி கட்டிங்..!
மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய அளவில் நாடுதழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கடந்த மார்ச் 28, 29 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில், தமிழகத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் மக்கள் கடுமையாக அவதிப்பட்ட நிலையில், போராட்டத்தின் இரண்டாவது நாள் 80 % ஊழியர்கள் வீட்டிற்கு திரும்பினர்.
ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தபோதிலும், அதனையும் மீறி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., வி.சி.க., ம.தி.மு.க உட்பட பல்வேறு தொழிற்சங்கம் ஈடுபட்டது. அண்ணா தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்கினர்.
இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள பிடித்தம் ஏப்ரல் மாதத்தில் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர்கள் பெரும்பாலும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால், அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளது.
இதனால் தமிழகத்தில் 1 இலட்சம் போக்குவரத்து கழக நபர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக்கத்தில் 18 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், முதல் நாளில் 90 % பேர் வேலைக்கு வரவில்லை. இரண்டாவது நாளில் 26 % பணியில் எடுபடவில்லை. இதன்பேரில், 15 ஆயிரம் பேர் சம்பளபிடித்தம் செய்யப்படும்.