பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை; அறிவிப்பு இதோ.!
வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
கடந்த சில நாட்களாகவே தமிழகமெங்கும் மழை பெய்து வரும் நிலையில், நவ. 6ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.