டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுமா.? டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வெளியிட்ட உறுதியான தகவல்.!



tasmac will not open in full lock down

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tasmac

இதன் காரமாக இன்று இரவு 9 மணி வரையிலும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்றும் நாளையும் திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள சூழ்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்தால் குடிமகன்கள் பெரும் எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால், டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து இருக்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்தமுறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது இரண்டு நாட்கள் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரேநாளில் 426 கோடி ரூபாய்க்கும் மேல் மதுவிற்பனையானது குறிப்பிடத்தக்கது.