தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மதுக்கடைகள் எப்போது திறக்கப்படுகிறது? இன்று வெளியான தீர்ப்பு என்ன.?
தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது போல் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்த நபர் ஒருவருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மூன்றாவது கட்டமாக நீடிக்கப்பட்டது. ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி, வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால், அவற்றை மூடும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டது.
இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (15 ம் தேதி ) விசாரணை நடந்தது. இந்த விசாரணயைில் ஆன்லைனில் மது விற்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என கூறி மதுக்கடைகளை மூடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுக்கடைகளை மூடக்கோரி மனுதாரருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம். அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் இதில் தலையிட முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.