6 மாதத்தில் கசந்து போன காதல்.. ஆசிரியர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் பெண் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் கஜப்பிரியா. இவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கஜப்பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கஜ பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.