#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்ட அர்ச்சகர்.! கோவில் பின்புறம் சடலமாக கிடந்த சம்பவம்.! நடந்தது என்ன.?
சிலைகள் காணாமல் போன கோவிலின் அர்ச்சகர் மர்மமான முறையில் கோவிலின் பின்புறம் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்து உள்ள கொண்டல் என்ற கிராமத்தில் குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பலவருடம் பழமை வாய்ந்த இந்த கோவிலை அந்த பகுதி மக்கள் கீழ் பழனி என அழைக்கிறார்கள். இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் இருந்த சாமி சிலைகளை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே சிலைகள் காணாமல் போன கோவிலில் அர்ச்சகராக நடராஜன் (50) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
கோவில் வாசலிலையே தனது வீட்டில் வசித்து வந்த நடராஜன் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்னம் கிராமத்தில் இருக்கும் சிவன் கோவிலிலும் பூஜை செய்து வந்துள்ளார். கொண்டல் குமார சுப்பிரமணியசுவாமி கோவில் சிலைகள் கொள்ளைய டிக்கப்பட்டதில் இருந்தே நடராஜன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
கொண்டால் கோவிலில் நடராஜனின் மகன்கள் பூஜையை கவனித்துவந்துள்ளனர். அதேநேரம் குன்னம் சிவன் கோவிலுக்கு நடராஜன் சரியாக செல்வதில்லை. அப்படியே சென்றாலும் துணைக்கு ஒருவரை அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும் குன்னம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்ய நடராஜன் சென்றுள்ளார். ஆனால், இந்தமுறை துணைக்கு அவர் யாரையும் அழைத்துசெலவில்லை. தனியாக சென்ற நடராஜன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் நடராஜனை தேடி குன்னம் கிராமத்திற்கு சென்றுள்ளன்னர்.
இதனிடையே அதே பகுதியில் உள்ள கீழமாத்தூர் என்ற ஊரில் வீரன் கோவில் பின்புறம் நடராஜன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. சிலைகள் காணாமல் போனதில் இருந்து சரியாக பூஜை செய்ய முடியவில்லை, அடிக்கடி போலீசாரின் விசாரணை போன்ற காரணங்களால் நடராஜன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம், சிலைகளை கடத்தியவர்கள் நடராஜனை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தினமும் குன்னம் கிராமத்திற்கு பூஜைக்கு செல்லும் நடராஜன் துணைக்கு யாரையாவது அழைத்து செல்வது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்று மட்டும் நடராஜன் யாரையும் அழைத்து செல்லாதது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.