தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சியில் தொடரும் பதட்டம்: 3 வது நாளாக போலீஸ் குவிப்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்திற்கு அருகேயுள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியான சக்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி. இவர் அந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்துவந்தார்.
இவர் கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். தொடக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பலரும், தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளியின் பல பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சக்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 3 வது நாளாகஇன்றும் காவல்தூறையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.