பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாராபுரம் அருகே பயங்கர விபத்து... பெற்றோர் கண் முன்னே பலியான 7 வயது சிறுவன்.!
சேலம் நகரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏழு வயது சிறுவன் பெற்றோர் கண் முன்னே பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சரக்கு வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சேலம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நவ்பில் (32). இவர் இருசக்கர வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிலோபர் நிஷா(28). இந்த தம்பதிகளுக்கு ஏழு வயதில் முகமது நவ்பில் என்ற மகன் இருந்தான். அவன் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் குடும்பத்தினர் மூன்று பேரும் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று காலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற வாகனம் காங்கேயத்திலிருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் திருப்பூரிலிருந்து இரும்பு லோடு ஏற்றி வந்த சரக்கு வேன் காங்கேயம் பிரிவு சாலை அருகே அப்துல் நவ்பில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது தலையில் அடிபட்ட சிறுவன் நவ்பில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த அகமது நவ்பில் மற்றும் அவரது மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் இறந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக சரக்கு வேனை ஓட்டி வந்த ஓட்டுநரான சங்கர பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.