#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருச்சி அருகே பயங்கரம்... உறவினர்களுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி... 3 பேர் கைது!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கணவனை கொன்று அவரது உடலை எரிக்க முயன்ற வழக்கில் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(40) இவரது மனைவி தனலட்சுமி(36). சிவலிங்கம் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சிவலிங்கம் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது.
இதனால் குடித்துவிட்டு அடிக்கடி வந்து தனது மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார் சிவலிங்கம். இது தொடர்பாக தனலட்சுமி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனலட்சுமி என் உறவினர்களான செந்தில்குமார் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் சிவலிங்கம் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அப்போது உறவினர்களுடனும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் சிவலிங்கம். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் இரும்பு கம்பியால் அடித்து சிவலிங்கத்தை கொலை செய்து இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை மறைப்பதற்காக சாக்கு மூட்டையில் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத நாவலூர் குட்டப்பட்டு பாலத்திற்கு எடுத்து வந்திருக்கின்றனர் . அதனை பாலத்தில் இருந்து வீசி எறிவதற்காக காத்திருந்தபோது அந்த வழியாக ரோந்து பணிக்கு வந்த காவல் ஆய்வாளர் விஜயகுமார் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக கார் நிற்பதை கண்டு விசாரித்து இருக்கிறார். அப்போது இவர்களுடன் வந்த செந்தில் குமார் என்ற நபர் தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் சிவலிங்கம் மூட்டை கட்டப்பட்டு பிணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்களான ஆறுமுகம் அவரது மனைவி சுமதியாகியோர் கைது செய்யப்பட்டனர் . தப்பி ஓடிய செந்தில்குமாரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.