#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுதான் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை! எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக இந்த முறையும் அதிகப்படியான எண்ணிக்கையில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படு தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 37 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது அதிமுக தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை நம்பி நின்ற பாஜக உட்பட அணைத்து கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து நின்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் 2,15,934 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்றார்.